பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போராட அமெ­ரிக்கா துணை நிற்கும்-அலிஸ் வெல்ஸ்

289 0

பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு இலங்கை மற்றும் உல­கெங்­கிலும் உள்ள பங்­கா­ளர்­க­ளுடன் இணைந்து அமெ­ரிக்கா தொடர்ந்து பணி­யாற்றி வரு­வ­தாக தெற்கு, மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் பதில் உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் கொழும்பு வந்த அலிஸ் வெல்ஸ், கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் தேவா­ல­யத்­துக்குச் சென்று குண்­டு­வெ­டிப்­பு­களில் உயி­ரி­ழந்­தோ­ருக்கு மலர் வளையம் வைத்து அஞ்­சலி செலுத்­திய பின்­னரே இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அதே­வேளை, நேற்­று­முன்­தினம் முற்­பகல் எதிர்க்­கட்சித் தலைவர் மகிந்த ராஜ­ப­க் ஷவைச் சந்­தித்துப் பேசிய அலிஸ் வெல்ஸ் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வையும், வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வையும் நேற்று சந்­திக்க ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.

எனினும் ஜனா­தி­ப­தியை அவர் சந்­திப்­ப­தற்­கான நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.