பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்கள் வெகுவிரைவில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளாகவும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சுதந்திர கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராகக் களமிறக்குவதாகவே நாம் தெரிவித்து வந்தோம். தற்போது கூட்டணி தொடர்பிலும் , வேட்பாளர் தொடர்பிலும் சிக்கல் தோன்றியுள்ளது. இதற்கான உரிய தீர்வினை கட்சி தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.