யாழ்.சுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது வாள்வெட்டு நடாத்த்ப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் சோதணை கெடுபிடிகள் அதிபரிக்கப்படுவதால் யாழ்.மக்களிடையே மேலும் பதற்றமான நிலை அதிகரித்துள்ளது.
இன்று மாலை யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள புவை வியாபார நிலையம் ஒன்றிற்குள் வாள்களுடன் நுழைந்த கும்பர் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கி நாசம் செய்துள்ளது.
இதன் போது அங்கு சிவில் உடையில் பாதுகாப்பின் நின்று கொண்டிருந்த பொலிஸார் வாள்களுடன் நின்றவர்களை பிடிப்பதற்கு முயட்சித்துள்ளனர்.
இதன் போது இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீதும் சரமாரியான வாள்வெட்டு நடாத்தப்பட்டள்ளது. இதில் தலை மற்றும் கையில் படுகாயடைந்த பொலிஸார் அங்கிருந்து மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பின்னர் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.