மஹிந்த – கோட்டா உள்ளிட்ட பிரதநிதிகள் அநுராதபுரத்திற்கு விஜயம்

355 0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதநிதிகள் அநுராதபுரத்திற்கு இன்று செல்கின்றனர்.

இன்று (12) இரவு 7 மணிக்கு ருவான்வெலிசாய விகாரையில் நடைபெறவுள்ள ஆசிர்வாத வழிப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த குழுவினர் நாளை (13) காலை ஸ்ரீ மகா போதியை வழிப்படவுள்ளதாகவும்ம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் நேற்று (11) இரவு களனி ரஜமகா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்கள் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு சென்றதுடன் இதன் போது பெருமளவிலான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

இதன்போது கூடியிருந்த மகாநாயக்க தேரர்கள் நாட்டுக்காகவும், கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதநிதிகளுக்காகவும் விசேட பிரார்தனைகளில் ஈடுபட்டனர்.

இங்கு களனி ரஜமாகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொல்லுபிட்டி மஹிந்த சன்சரக்ஷத தேரர் உள்ளிட்டவர்கள் சமய போதனைகளை நடத்தினர்.