சிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி

484 0

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போராளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய  போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து அங்குள்ள இரு போராளி குழுக்களுக்கிடையே மோதல்களும் நடந்து வருகின்றன.
இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன
இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் அரசு சார்பு படைவீரர்கள் மற்றும் போராளிகள் என 55 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.