கோதபாய ராஜபக்ஷவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ தேர்தலில் போட்டியிடுவதற்கான பெரும்பான்மை இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் ஏனைய கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும் இம்முறை மக்கள் ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்திருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசியல் புரட்சியொன்று ஏற்படும் என்று தாமும் எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அது குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.