ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை-தயா

297 0

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அது கட்சி யாப்புக்கு உட்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபஷ குடும்பத்தை தவிர வேறு யாரிற்கும் வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகிய பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் எனவும் அதுவே கட்சியின் சம்பிரதாயமாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.