பிலிப்பைன்சில் ராணுவம்- புரட்சிப்படை மோதல்: 4 பேர் பலி

321 0

பிலிப்பைன்ஸ் நாட்டில் இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் நீக்ரோஸ் ஆக்சிடெண்டல் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், புதிய மக்கள் ராணுவ படையைச் சேர்ந்த 20 பேருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று பிற்பகல் 2 மணியளவில் மோதல் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் நடைபெற்ற இந்த சண்டையில் புரட்சிப்படையை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தினர் தரப்பில், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார் மற்றும் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து இருந்து பல்வேறு வகையான உயர்ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மக்கள் ராணுவ படை என்பது பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு ஆயுதக் குழுவாகும். 1980 ம் ஆண்டு முதல் அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. 1960 முதல் இந்த அமைப்பினர் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.