எனது வெற்றிக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளும் அவசியம் – கோட்டாபய

242 0

எனது வெற்றிக்குச் சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியம் இல்லை என்று தான் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் வாக்குகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல் வாதிகளுடன் சேர்ந்து போலியான செய்திகளைப் பரப்பும் ஊடகங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.