மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துல லால் பண்டாரி கொடவினால் கடந்த முதலாம் திகதி பாராளுமன்றில் தனிநபர் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன் பந்துல லால் பண்டாரி கொடவினால் சமர்ப்பிக்கப்பட் சட்டமூலத்தை சட்டமாக்குமாறு ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை பந்துல லால் பண்டாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தனக்கு அறிவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.