நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் 70–80 கிலோ மீற்றரை விட அதிகமான காற்று வீசக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 9 மணிவரை இந்த சிவப்பு எச்சரிக்கை நடைமுறையிலிருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, குருணாகல், மாத்தளை, கண்டி, கம்பஹா, கொழும்பு, நுவரெலியா, மற் றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வடக்கு வடமத்திய வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களி லும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70–80 கிலோ மீற்றர் அதிகரித்துக் காணப்படும்.நீர்கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வழியாக மன்னார் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60–70 கிலோ மீற்றர் வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.எனினும் பகல் அல்லது இரவு வேளைகளில் கடற்பிரதேசங்களிலும் காற்றின் வேகமானது 80 கிலோ மீற்றரை விட அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது