கொழும்பிலிருந்து இந்தியாவின் கொச்சின் செல்லும் விமானங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொச்சின் பகுதியில் பெய்து வரும் கனமழை கரணமாக கொச்சின் விமான நிலையத்தில் வெள்ளம் தேங்கியிருப்பதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு உங்களது பயண முகவருடனோ அல்லது கொச்சியில் உள்ள இலங்கை விமான சேவையின் +914842362042 இலக்கத்துடனோ அல்லது இலங்கை விமான சேவையின் 24 மணிநேர சேவை +94117771979 24 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.