கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அறுவாக்காடு கழிவு சேகரிப்பு பிரிவிற்கு அனுப்பவதற்கு நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குப்பை சேகரிக்கும் ஒப்பந்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வத்தள, கெரவலபிட்டிய கழிவு சேகரிப்பு பிரிவிற்கு நடவடிக்கைகளை நிறுத்தவதற்கு கடந்த 5 ஆம் திகதி மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனால் கொழும்பினும் குப்பை சேகரிப்பது தற்காலிகாமாக நிறுத்தப்பட்டிருந்ததன் காரணமாக பல்வேறு வீதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்நிலையிலேயே கொழும்பு நகரின் குப்பைகளை ஏற்றுக் கொள்ள புத்தளம் அறுவாக்காடு கழிவு சேகரிப்பு பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.