620 விமானப் பயணங்களை ரத்துச் செய்யவுள்ள சிறீலங்கா

320 0

1000-upload-iblock-a75-srilankan-airlines_comகட்டுநாயக்கா விமானசேவையின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதால், 620 விமான சேவைகளை ரத்துச் செய்யும் நிலைக்கு சிறீலங்கா விமான சேவை தள்ளப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா விமான ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை பகல்நேர விமான சேவைகள் ரத்துச்செய்யப்படவுள்ளன.

இதனால் மொத்தம் 200 விமான சேவைகள் ரத்துச்செய்யப்படும் என சிறீலங்கா விமான சேவை நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், மாதம் ஒன்றுக்கு 200 விமான சேவை ரத்துச் செய்யப்படுமெனவும், நாளொன்றுக்கு 7 விமானப் பயணங்கள் ரத்துச்செய்யப்படுவதால், மூன்று மாதங்களிலும் மொதம் 620 விமானசேவைகள் ரத்துச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மாலே, திருச்சி, மதுரை போன்ற குறுந்தூரப் பயணங்களே அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் பயணங்களை ரத்துச்செய்தால் சிறீலங்கன் விமான சேவைக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு மாற்றீடாக மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்த சிறீலங்கா விமானசேவை அவ்வளவுக்கு விருப்பம் காட்டவில்லை.

ரத்துச் செய்யப்படும் பெரும்பாலான விமானப் பயணங்கள் 4 மணிநேரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும், இந்த நான்கு மணிநேர விமானப் பயணங்களுக்காக, மத்தலவுக்கு நான்கு மணிநேரப் பயணத்தை மேற்கொள்ள பயணிகள் தயாராக இருக்கமாட்டார்கள் என்றும் சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.