அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு

333 0

im032அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் கோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திடமே கையளிக்கப்படவுள்ளது.

தனியார் மற்றும் அரச கூட்டிணைவுமூலம் 1394 மில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

துறைமுக அபிவிருத்திக்காக செலவிடும் நிதியில் 1080 மில்லியன் டொலரை சீன நிறுவனம் பொறுப்பேற்கும். இதற்காக துறைமுகத்தின் 80வீதப் பங்கை சீன நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கவுள்ளது.

சீன மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஏற்கனவே கொழும்பு தெற்கு கொள்கலன் முனையத்தையும் தரமுயர்த்துவதில் முதலீடு செய்துள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் சிறீலங்கா அரசாங்கம் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது.

இதற்குப் பதிலாகவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பாலான பங்குகளின் உரிமத்தை சீன நிறுவனத்துக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரச – தனியார் கூட்டு முயற்சிகளின் மூலம் இந்தத் துறைமுகத்தைச் செயற்படுத்துவதன்மூலம் கடன் சுமையைக் சுமையைக் குறைக்கமுடியும் என அரசாங்கம் நம்புகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.