குருதி மாற்றியேற்றியதில உயிரிழந்த 9 வயது சிறுவனின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்பகை;குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான கட்டளை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவனுக்கு குருதி மாற்றியேற்றியதில் ஏற்பட்ட மரணம் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், உட்பட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் தவறியமையினால் இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான் இன்று புதன்கிழமை (07) கட்டளையிட்டார்.
இன்று 7 ம் திகதி ஆஜர்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் இந்த உத்தரவை செயற்படுத்தாவிட்டால் இதனை சி.ஜ.டி யினரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்தார்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது ஜெயக்காந்தன் விதுலஷ்சன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மாற்றப்பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மாச் 19 ம் திகதி உயிரிழந்தார்
இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் தனது மகன் உயிரிழந்தாக முறைப்பாடு செய்திருந்தனர்
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 08 திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு கடந்த 4 மாதங்களாக உத்தரவிட்ட நிலையில், இன்று 7 ம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் தவறின் இந்த வழக்க விசாரணையை குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்படும் என பொலிசாருக்கு எச்சரித்து உத்தரவிட்டார் .
இன்று பதன்கிழமை காலை இந்த வழக்கை நீதிமன்றில் எடுத்தபோது ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர் இருந்தபோதும் ஏனைய சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் சந்தேகநபர்களை பகல் ஒரு மணிக்கு ஆஜர்படுத்துமாறு நீதவான் வழக்கை பிற்பகல் 1.30 மணிவரைக்கும் பிற்போட்டார்
மீண்டும் இந்த வழக்கை எடுத்தபோது பொலிசார் சந்தேக நபர்களை ஆஜர்படுத்த வில்லை இதேவேளை ஏற்கனவே கைது செய்யக்கட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர் நீதவான் பொலிசார் இந்த நீதிமன்ற நீதியை நிலைநாட்ட வில்லை எனவும் இந்த வழக்கு விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் முன்னெடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அநீதிநிலை ஏற்படும்
எனவே 2010 ம் ஆண்டு சட்டத்தில் வைத்தியர்களை கைது செய்யமுடியாது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் எனவும் பொலிசார் நீதிமன்றல் தெரிவித்து வந்துள்ளனர்
ஆனால் சட்டமா அதிபரின் ஆலோசனையை கடந்த 4 மாதங்களாக பெறாது பொலிஸ் அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். எனவே இந்த வழக்கு விசாரணை ஆவணங்களை பொலிசாரிடம் பெறப்பட்டு இந்த வழக்கு விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறும்.
இந்த வழக்கு சந்தேக நபர்களை கைது செய்யாததன் காரணம் என்ன என விசாணையை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி மீது விசாரணை மேற்கொள்ளுமாறும் பொலிசாருக்கு கட்டளையிட்டு இந்த வழக்கை எதிர்வரும் செட்டெம்பர் 4 ம் திகதி (04-09-2019) ஒத்திவைத்துள்ளார்.