கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடைய மரண விசாரணைகள் நீதியானதாக இடம்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராஜா,
பொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள் மற்றும் பலருடன் பேசிய பின்னர் தெளிவாக அறிந்துகொண்டேன் துப்பாக்கிச் சூட்டில்தான் இந்தக் மரணங்கள் சம்பவித்திருக்கிறது என்று.
இதன் பின்னர்; இனிமேல் இவ்வாறான் சம்பவங்கள் நடைப்பெறக் கூடாது என்றும் அத்தோடு இச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்;டுக்கொண்டனர்.
இதனை நாம் உடனடியாக திருகோணமலையில் நின்ற ஜனாதிபதியிடம் இதனை தெரிவிக்கும் படி சம்மந்தன் அவர்களிடம் தெரியப்படுத்தினோம் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதன் பின்னர் அந்தக் கொலைகார கும்பலில் ஜந்து பொலீஸார் இருந்துள்ளனர் தற்போது அவர்கள் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள், அவர்களது வேலையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை நேற்று மாலை பொலிஸ் மா அதிபர் என்னிடம் நேரடியாக கூறியிருந்தார்.
இந்தச் சம்பவத்தை நாம் எல்லோரும் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்தோடு மிக நீதியான விசாணையும் வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாது இருப்பதுதான் எமது மக்களும், மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஜனாதிபதியும் இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.
எனவே இந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை இறந்திருப்பது மிகவும் மனவேதனையளிக்கிறது அந்தக் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் அத்தோடு இந்தக் குடும்பத்திற்கு நாமும் உதவிகளை செய்வோம் என்று மேலும் தெரிவித்தார்.