முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை கடற்படைத் தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொட, கடற்படையின் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.
இதேவேளை, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய ரொஷான் குணதிலக, விமானப்படை சீப் மார்ஷலாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.