கோத்­த­பாய கட­வுச்­சீட்டைப் பெற்­றமை தொடர்பில் கிளம்­பும் பல கேள்­விகள்

216 0

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அவ­ரது இரட்டைக் குடி­யு­ரிமை அந்­தஸ்து தவிர்க்­கப்­பட்ட கட­வுச்­சீட்­டொன்றை கடந்த மே மாதம் குடி­வ­ரவு, குடி­ய­கல்வுத் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து எவ்­வாறு பெற்றார் என்­பது தொடர்பில் கேள்­விகள் கிளப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன. 

 

தான் இலங்கைச் சட்­டத்தின் கீழ் இப்­போது ஒரு இரட்டைப் பிர­ஜை­யல்ல என்­ப­தற்கு இந்தக் கட­வுச்­சீட்டு சான்று என்று கடந்­த­வாரம் ராஜ­பக் ஷ செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யி­ருந்தார்.

ஆனால் இரட்டைக் குடி­யு­ரி­மை­யுள்ள நபர் கள் வழ­மை­யாக இலங்கைக் குடி­யு­ரி­மையை மீண்டும் பெறு­வ­தற்கு விரும்­பினால் குடி­யு­ரிமைச் சட்­டத்தின் கீழ் முறைப்­ப­டி­யான விண்­ணப்­பத்தைச் செய்ய வேண்டும் என்று குடி­வ­ரவு குடியகழ்வு அதி­கா­ரிகள் கூறு­கின்­றார்கள். ராஜ­பக்ஷ இந்த வழ­மை­யான செயன்­மு­றையைப் பின்­பற்­ற­வில்லை என்றும், ஆனால் அவர் எவ்­வாறோ கட­வுச்­சீட்டைப் பெற்­று­விட்டார். அதில் அவ­ரது இரட்டைக் குடி­யு­ரிமை அந்­தஸ்து குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் அந்த அதி­கா­ரிகள் கூறு­கின்­றார்கள்.

குடி­வ­ரவு குடியகழ்வுத் திணைக்­க­ளத்தில் புதிய விண்­ணப்­பங்­களைப் பெறு­வ­தற்­கான முடிவு நேரம் தினமும் பிற்­பகல் 3 மணி­யாகும். ஆனால் மே 7 ஆம் திகதி பிற்­பகல் 3 மணிக்குப் பின்னர் பெறப்­பட்ட ராஜ­ப­க் ஷவின் கட­வுச்­சீட்டு விண்­ணப்­பப்­ப­டிவம் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் பரி­சீ­லனை செய்­யப்­பட்­டுள்­ளது என்­பதைத் திணைக்­க­ளத்தின் பதி­வுகள் காட்­டு­கின்­றன.

விரல் அடை­யா­ளத்தைப் பதிவு செய்­வ­தற்கு ராஜ­பக் ஷ குடி­வ­ரவு திணைக்­க­ளத்­திற்கு நேரில் பிர­சன்­ன­மா­கியும் இருக்­க­வில்லை. அவ­ரது முன்­னைய தேசிய அடை­யாள அட்டை அல்­லது எல்லைக் கட்­டுப்­பாட்டுப் பதி­வு­க­ளுடன் எந்தத் தொடர்­பு­மில்­லாத புதி­ய­தொரு தேசிய அடை­யாள அட்­டையின் கீழ் சில மணித்­தி­யால நேரத்­திற்குள் கட­வுச்­சீட்டு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

புதிய தேசிய அடை­யாள அட்­டை­யொன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதால் குடி­வ­ரவுத் திணைக்­கள கணனி முறை­மையின் ஊடாக அவர் ஒரு இரட்­டைப்­பி­ரஜை என்ற பழைய பதிவைத் தன்­னி­யல்­பாக வெளிக்­காட்­டு­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஏய்ப்பு நட­வ­டிக்கை இனி­மேலும் தாங்கள் இரட்டைப் பிர­ஜைகள் அல்ல என்று நிரூ­பிப்­ப­தற்கு சாதா­ரண மக்­க­ளினால் பின்­பற்­றப்­ப­டு­கின்ற சட்­டச்­செ­யன்­மு­றை­களை கோத்­த­பாய தவிர்ப்­ப­தற்கு வாய்ப்பைக் கொடுத்­தது.

இரட்டைக் குடி­யு­ரிமை என்­பது முன்னாள் இலங்கைப் பிர­ஜைகள், ஒரு இலங்கைப் பிர­ஜையின் உரி­மைகள் அனைத்­தையும் பயன்­ப­டுத்­து­வத­ற்கு அனு­ம­திக்கும் வகையில் இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் அந்­தஸ்து என்று அதி­கா­ரிகள் கூறினர். ‘வழ­மை­யான குடி­யு­ரி­மையைப் போலன்றி இது கண்­டிப்­பாக அர­சியல் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லான ஒன்­றாகும். அமைச்சர் தேசிய நலன்­களை மனதில் கொண்டு இரட்டைக் குடி­யு­ரி­மையை அங்­கீ­க­ரிப்­ப­தற்கு அல்­லது நிரா­க­ரிப்­ப­தற்கு அல்­லது இரத்துச் செய்­வ­தற்கு கேள்­விக்கு இட­மின்­றிய அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்­கிறார். குடி­யு­ரிமைச் சட்­டத்தின் 19 ஆவது பிரிவின் பிர­காரம், இலங்­கையின் நலன்­க­ளுக்கு சகல சூழ்­நி­லை­க­ளிலும் சிறந்­தது என்று அமைச்சர் திருப்­திப்­பட்டால் மாத்­தி­ரமே இரட்டை குடி­யு­ரி­மையை ஒரு­வ­ருக்குக் கொடுக்­கலாம்’.

வழ­மை­யான பிர­ஜை­களைப் போலன்றி இரட்டைப் பிர­ஜை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அந்­தஸ்தை அமைச்சர் இரத்துச் செய்­வ­தற்கு குடி­யு­ரிமைச் சட்டம் அனு­ம­திக்­கி­றது. இரட்டைப் பிர­ஜை­யொ­ருவர் இலங்கைப் பிர­ஜை­யாகத் தொடர்ந்து இருப்­பதால் இலங்­கைக்கு எவ்­வித பய­னு­மில்லை என்று அமைச்சர் கருதும் பட்­சத்தில் எந்த நேரத்­திலும் அவ­ரது இலங்கைக் குடி­யு­ரி­மையை இரத்­துச்­செய்­யலாம் என்று பிரிவு 19(7) கூறு­கி­றது.

இரட்டைப் பிர­ஜை­யொ­ருவர் இலங்­கையின் ஒரு சாதா­ரண பிர­ஜை­யாக மாறு­வ­தற்கு விரும்­பு­வா­ரே­யானால் (அவ­ரது அந்­தஸ்து இரத்துச் செய்­யப்­ப­டு­வ­தற்கு ஆட்­ப­டாத பட்­சத்தில்) அவர் மீண்டும் முழு­மை­யாக இலங்கைப் பிரஜை என்று பிர­க­டனம் செய்­யு­மா­று­கோரி குடி­யு­ரி­மைச்­சட்­டத்தின் கீழ் விண்­ணப்­பிக்க வேண்டும். இது­வி­ட­யத்தில் தீர்­மா­ன­மெ­டுக்கும் பொறுப்பு குடி­யு­ரிமை விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ருக்கே உரி­யது.

சகோ­த­ரரின் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரத்­திற்கு உதவும் முக­மாக 2005 ஆம் ஆண்டில் இலங்­கைக்குத் திரும்­பி­ய­தாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ உச்­ச­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்த சத்­தி­யக்­க­ட­தாசி மூலம் தெரி­ய­வ­ரு­கி­றது. அந்த நேரத்தில் அவர் ஒரு அமெ­ரிக்கப் பிர­ஜையே அன்றி இலங்கைப் பிரஜை அல்ல. மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்­காகப் பிர­சாரம் செய்யும் முக­மாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ தனது அமெ­ரிக்கக் கட­வுச்­சீட்­டுடன், நாட்டில் பிர­வே­சித்­த­வுடன் பெற்ற உல்­லாசப் பிர­யாண விசா­வு­ட­னேயே வந்­த­தாகக் குடி­வ­ரவுத் திணைக்­களப் பதி­வுகள் காட்­டு­கின்­றன. அவ­ரது சகோ­தரர் இலங்கை ஜனா­தி­ப­தி­யாகப் பத­விப்­பி­ர­மாணம் செய்த தின­மான 2005 நவம்பர் 18 வெள்­ளிக்­கி­ழமை கோத்­த­பாய ராஜ­பக்ஷ இரட்டைக் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பித்தார்.

கோத்­த­பாய ராஜ­பக் ஷ இலங்கைப் பிர­ஜை­யாக இல்­லாத நிலையில் அல்­லது தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்குத் தகு­தி­யில்­லாத நிலை­யிலும் கூட, 2005 ஜனா­தி­பதித் தேர்­தலில் பயன்­ப­டுத்­தப்­பட்ட வாக்­காளர் இடாப்பில் அவர் தன்னை ஒரு வாக்­காளர் எனப் பதிவு செய்­தி­ருந்­த­தாகத் தேர்தல் திணைக்­க­ளத்தின் பதி­வுகள் காட்­டு­கின்­றன. ராஜ­பக் ஷ நந்­தி­மித்ர கோத்­த­பாய 114 ஆம் இலக்க வீட்டின் 130 ஆம் இலக்க வாக்­காளர் என்று வீர­கட்­டி­ய­வி­லுள்ள மெத­மு­லா­ன­விற்­கான தேர்தல் இடாப்பில் நிரற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார். ராஜ­பக்ஷ பேர்ஸி மகேந்­திர, அவ­ரது மனைவி ராஜ­பக் ஷ சிராந்தி, கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் அமெ­ரிக்கப் பிரஜை மனைவி ராஜ­பக்ஷ அயோமா, ராஜ­பக்ஷ சமல் ஆகி­யோரும் அந்த 114 ஆம் இலக்க இல்­லத்­தி­லி­ருந்து வாக்­க­ளிப்­ப­தற்கு பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ராஜ­ப­க் ஷவின் இரட்டைக் குடி­யு­ரி­மை­யுடன் தொடர்­பு­டைய எந்­த­வொரு கோவை­யையும் குடி­வ­ரவுத் திணைக்­கள அதி­கா­ரி­களால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. 2005 நவம்பர் 18 (சகோ­தரர் மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட தினம்) அவர் இரட்டைக் குடி­யு­ரிமை விண்­ணப்­பத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகச் சமர்ப்­பித்த ஆவ­ணங்கள் மாத்­தி­ரமே கிடைக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

அவர் விண்­ணப்­பித்த தினத்­திற்குப் பின்­ன­ரான அடுத்த வேலை­நா­ளான 2005 நவம்பர் 21 திங்­கட்­கி­ழமை அவ­ரது விண்­ணப்பம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாகப் பதி­வுகள் காண்­பிக்­கின்­றன. அவ்­வாறு அவ­ரது விண்­ணப்பம் ஏற்­கப்­பட்ட அத்­த­ரு­ணத்தில் குடி­வ­ரவு, குடி­ய­கல்வுத் திணைக்­க­ளத்­திற்குப் பொறுப்­பாக அமைச்சர் ஒரு­வரும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. பல மாதங்­க­ளாகப் பெரு­வா­ரி­யான விண்­ணப்­பப்­ப­டி­வங்கள் பரி­சீ­லிக்­கப்­ப­டாமல் தேங்­கிக்­கி­டந்த போதி­லும்­கூட கோத்­த­பா­யவின் விண்­ணப்பம் முன்­னு­ரிமை கொடுத்துக் கவ­னிக்­கப்­பட்­டது.

இரட்டைக் குடி­யு­ரிமை 2005 நவம்­பரில் வழங்­கப்­பட்ட போதிலும் கூட ராஜ­பக்ஷ தொடர்­பான தர­வுகள் 2014 ஜன­வரி 13 ஆம் திகதி மாத்­தி­ரமே பதி­வேற்றம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக குடி­வ­ரவுத் திணைக்­கள கணனி முறைமை மூலம் தெரி­ய­வ­ரு­கி­றது. அத்­த­கைய சூழ்­நி­லையில் உண்­மை­யான நிலையை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு மூல­முதல் கட­தாசிப் பதி­வு­களை அல்­லது டிஜிட்டல் பதி­வு­க­ளையே பார்ப்­பார்கள்.

ஆனால் அதி­கா­ரிகள் விண்­ணப்­பத்­தி­னதோ, கொடுப்­ப­னவு செய்­யப்­பட்­ட­மைக்கான பற்­றுச்­சீட்­டி­னதோ, முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு இரட்டைக் குடி­யு­ரிமை சான்­றுப்­பத்­திரம் வழங்­கப்­பட்ட கோவை­யையோ திணைக்­கள அதி­கா­ரி­களால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இரட் டைப் பிர­ஜைகள் புதிய கட­வுச்­சீட்டைப் பெறும் போது தங்களது இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழை வழமையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கோத்தபாய ராஜபக் ஷ கடவுச்சீட்டொன்றைப் பெறும் போது இரட்டைக் குடியுரிமைச் சான்றி தழை சமர்ப்பித்திருக்கிறார் என்பதற்கான எந்தவொரு பதிவும் குடியகல்வுத் திணைக் களத்தில் இல்லை.

கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில், இரட்டைக் குடியுரிமை பற்றிய முக்கிய பதிவுகள் மாற்றம் செய்யப்பட்டதாகத் தோன்றுகிற அல்லது காணாமல் போயிருப்பதாகத் தோன்றும் சூழ்நிலைகளில் முறைகேடுகள் இடம்பெற் றிருப்பதாக சந்தேகிக்கப்பட்டார் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு விசாரணை யாளர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றை அனுப்புவதே வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கையாகும். ஆனால் இந்த விவகாரத்தில் குடிவரவு அதிகாரிகள் தகவல் களை குற்றவியல் விசாரணைத் திணைக்களத் திற்கு அனுப்பியிருக்கவில்லை என்று தெரியவருகிறது.

(பைனான்சியல் டைம்ஸ்)