இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று தனது உயர்தர பரீட்சையை எழுதுவதற்காக பாடசாலைக்கு சென்றார்.
கடந்த 1981 ஆம் ஆண்டு தனது உயர்தரத்தை நிறைவு செய்த அவர் 38 ஆண்டுகளுக்கு பின் மீணடும் இரண்டாவது முறையாக உயர்தரப் பரீட்சை எமுதியுள்ளார்.
இந்நிலையில் தனது முதல் முயற்சியின் போது உயர்தர தேர்வுகளில் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இரண்டாவது முறை பரீட்சை எழுதுவதற்காக தனியார் ஆசிரியர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து கல்வி கற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு வழக்கறிஞராக வர வேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உயர்தர தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.