பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றில் கசிப்பு அருந்தி சிலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கவனத்திற் கொள்ளாமல் இருந்த காரணத்தினால் இவ்வாறு உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.