குருநாகல் மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க 61 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அவர் இன்று (திங்கட்கிழமை) காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாக அவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.