பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் உசைன் இலங்கைக்கு வருகைதந்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவித்து விமல் வீரவங்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கின் பிரதான சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சுகயீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இதனால் வழக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன தீர்மானித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் குறித்த வழக்கை நவம்பர் மாதம் 4 ஆம் திகதிவரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் விமல் வீரவங்சவின் நோய் தொடர்பான வைத்திய அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.