இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் கொள்கை உருவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன்போது கடந்த 30 வருடகால யுத்தம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், யுத்தம் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு இனங்காணுதல், அவர்களுக்கான இழப்பீட்டை எதனடிப்படையில் ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தீர்மானிக்கப்படும் என்று இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஆணையாளர் லெப்டினன் கேர்ணல் டபிள்யு. டபிள்யு. ரத்னப்பிரிய பந்து தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2018 ஒக்டோபர் மாதம் 9 திகதி நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தின் மூலம் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த அலுவலகத்திற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து அலுவலகம் செயற்பட ஆரம்பித்தது. இந்நிலையில் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.