வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்குஎதிராக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதிலிருந்து எந்தவிதமுன்னறிவித்தலுமின்றி உடனடியாக பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டது
இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநராக கடந்த ஜனவரி மாதம் கலாநிதி சுரேன் ராகவன் பதவிஏற்றதற்கு பின்னர் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடினர்
அதன் பின்னர் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி பொதுசேவை ஆணைக்குழு அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது உறுப்பினர்களை உடனடியாக சந்திக்குமாறு அழைத்த ஆளுநர் அவர்களை இராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளார்.
அதற்கு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்திருந்தநிலையில் பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளரால், மேற்குறித்த உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு ஆளுநர் கூறியதாக கடிதம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது
இதற்கும் மேற்குறித்த உறுப்பினர்கள் இராஜினாமா செய்யாத காரணத்தினால் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழு கலைக்கப்பட்டதாக ஆளுனரால் அறிவிக்கப்பட்டது
அரசியல் யாப்புக்கு அமைவாக ஆளுநரால் பொதுசேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் இருந்தபோதும் கலைக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை ஆனாலும் உறுப்பினர்கள் விரும்பும் பட்சத்தில் தாங்களாக இராஜினாமா செய்ய முடியும் அல்லது ஆணைக்குழு உறுப்பினர்களை கலைப்பதற்கான தகுதியான காரணங்கள் முன்வைக்கப்பட்டு அதுஉறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஆளுநர் கலைக்கலாம்.
ஆனால் தகுதியான காரணங்கள் இல்லாமல் பொதுசேவை ஆணைக்குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து உறுப்பினர்களால் கடந்த வெள்ளிக்கிழமை வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.