சிவகாசியில் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜி.கே.மணி கூறினார்.சிவகாசியில் 8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு கடை வெடி விபத்து நடந்த இடத்தை பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த வெடி விபத்துக்கு தொழிலாளர்களின் அலட் சியமே காரணம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க மாநில அரசு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
மேலும் வெடி வெடிப்பவர்களுக்கும் அதில் உள்ள ஆபத்து குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும். பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதில் செலுத்தும் மூலப்பொருட்களின் அளவை குறைக்க வேண்டும்.
தற்போது வரும் பட்டாசுகளில் மூலப்பொருட்கள் அதிக அளவில் கலப்பதால் அது பயங்கர சத்தத்தையும், கரும்புகையையும் ஏற்படுத்துகிறது. வெடி விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.