நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் என்.ஆர்.காங். போட்டியா?

327 0

201610220945129451_rangasamy-says-nellithoppu-by-election-nr-congress-contest_secvpfநெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியும், அ.தி.மு.க. வேட்பாளராக ஓம்சக்தி சேகரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் இருந்து வந்தது. இதையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை ஓட்டலில் நடந்தது. கட்சித் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், என்.எஸ்.ஜெ. ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாறன், கோபிகா, பிரியங்கா மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா? அல்லது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்று ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்போம்’.இவ்வாறு ரங்கசாமி கூறினார்.