அமெரிக்காவுக்கு போறீங்களா?

4083 13

201606291941433054_US-visa-applications-may-soon-require-travellers-to-provide_SECVPFஅமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், டுவிட்டர் விபரங்களையும் கேட்டுப் பெற அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது, மற்ற முக்கிய தகவல்களோடு, இணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள விபரங்களையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள விபரங்களை சேகரிப்பதன் மூலம் குற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த மற்றும் கொடிய தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் இணைப்புகளை கண்டறிய உதவும் என்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பட்ட பரிந்துரைக்கு அதிபர் ஒபாமா ஆகஸ்ட் 22-ம் தேதி ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment