வெளிநாட்டு சிகரட்டுக்களை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கடத்தி வந்த ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் காலி, இமதுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.40 மணி அளவில் டுபாயிலிருந்து வந்த விமானத்தில்பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து டுபாயில் தயாரிக்கப்பட்ட 13,000 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 650,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.