போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
போக்கோஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து பல முயற்சிகளுக்கு பின்னர் தப்பிய 17 வயது நைஜீரிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் விவரித்துள்ளார்.
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள இவரது வீட்டில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு குறித்த இளம்பெண் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டார்.
குறித்த பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் அந்த கூட்டத்தில் மொருவர் தம்மை திருமணம் செய்து கொண்டதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே தமது வாழ்க்கையில் கொடுமைகள் பல நடந்தேறியது என்று அவர் கண் கலங்கி விவரித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் ஒரு வேலைக்காரி போன்று நடத்தப்பட்டுள்ளார். அனைத்து பணிவிடைகளையும் செய்து முடித்த பின்னரும் ஓய்வுக்கு நேரம் இருக்காது என்றார் அவர்.
பயங்கரவாதிகளுக்கு உணவு சமைக்க வேண்டும், அவர்கள் உண்டு முடித்த பின்னர் அனைத்து எச்சில் பாத்திரங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். அதன் பின்னரே உணவு அருந்த வேண்டும்.
திருமணத்திற்கு பின்னர் கணவருக்கு மட்டுமே பணிவிடை செய்தால் போதும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னரே கொடுமைகள் தொடங்கியது என்றார்.
குறித்த நபரை திருமணம் செய்துகொள்ள தமக்கு விருப்பமே இல்லை என்றபோதும் தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் அவர்,
அந்த நபர் தொடர்ந்து சித்திரவதைக்கு தம்மை ஆளாக்கியதாக குறிப்பிட்ட அந்த இளம்பெண், பாலுறவுக்கு மறுத்த போதெல்லாம் தம்மை வன்புணர்வுக்கு உள்ளாக்கினார் என்றார்.
மட்டுமின்றி தம்மை அவர் தேவை இன்றி கடுமையாக தாக்கி வந்தார் எனவும், எத்தனை நாள் எத்தனை முறை அவர் என்னை தாக்கினார் என்பதற்கு கணக்கில்லை என்றார்.
அதுமட்டுமின்றி, போக்கோ ஹரம் பயங்கரவாதிகளால் தண்டிக்கப்படும் கொடூர நிகழ்வுகளையும் தங்களை பார்க்க நிர்பந்தித்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதில் கல்லால் அடித்து கொல்லுதல், கழுத்து துண்டித்து கொல்லுதல் அல்லது சித்திரவதைக்கு ஆளாக்குதல் உள்ளிட்டவைகள் ஒரு பொழுதுபோக்கு போல அவர்கள் தினசரி நிறைவேற்றி வந்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.
இனி தமது வாழ்க்கை தனக்கான குடும்பத்தினருடன் மட்டுமே என்றும் வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கை ஒன்றை துவங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.