எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

360 0

எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டி மற்று அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு இலங்கை மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று கண்டி எசல பெரஹெரா ஆரம்பமானது. இதனை முன்னிட்டே 5 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து 15 ஆம் திகதிவரை அந்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தளதா மாளிகையிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்பட உள்ளன. இதன்போது கண்டி பிரிவிற்குட்பட்ட  கடவத்சர , கங்கவடகோரலய பிரதேச செயலக பிரிவு , பேராதினை , கட்டுகஸ்தொட , அலதெனிய ,அம்பதென்ன , மடவல ,மெணிக்ஹின்ன ,திகன மற்றும் தலாத்துவோய ஆகிய பகுதிகளை பிரதானமாக கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை இந்த காலப்பகுதியில் இதுவரை அனுமதியுடன் இயங்கிவந்த சில்லரை மதுபான நிலையங்களிலும் , சட்டவிரோதமாக இயங்கிவரும் சில்லரை மதுபான விற்பனை நிலையங்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுவது பொலிஸாரால் கண்டறியப்பட்டால் விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.