ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் பலமான கூட்டணியொன்று நிச்சயமாக உருவாக்கப்படும். கூட்டணி தொடர்பான இணக்கப்பாடு கைச்சாத்திடபடுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்.
அந்த ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க ,சஜித் பிரேமதாசவை தவிர கட்சிக்குள் வேறு எவரும் இருப்பார்களாக இருந்தால் சகலருடனும் கலந்துரையாடி அவர்களின் தீர்மானத்துக்கு இணங்க தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் உத்தேசிக்கப்பட்ட கூட்டணியின் யாப்புக்கான இன்னும் அனுமதி எதுவும் வழங்கப்பட வில்லை. கூட்டணியின் பொது செயலாளர் பதவி ஐக்கிய தேசிய கட்சயின் உறப்பனருக்கே வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் ஒரு கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்பட வேணடும் எனவும் அவர் கோரினார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் கூறியதாவது ;
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்க்குழு வியாழக்கிழமை கூடியது. இந்த செயற்குழுவில் பிரதானமாக புதிய கூட்டணியில் கைச்சாத்திடல் மற்றும் கூட்டணியின் யாப்பு தொடரபிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கூட்டணியின் யாப்பு தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட வில்லை. அந்த யாப்புக்கான அனுமதி கோரும் பேச்சுவார்த்தைகளும் செயற்குழுவில் இடம்பெற்றன. ஆனால் அந்த யாப்பை அனுமதிக்க முடியாது. யாப்பை புரிந்துக்கொள்வதற்கு தேவையான கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்க வில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ளும் சக்தி ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளது.
ஆகவே அவசரமாக யாப்பை தயாரித்து கூட்டணியில் கைச்சாத்திடுவதற்கான அவசியம் இல்லை. எதிர்வரும் ஐந்தாம் திகதியே கூட்டணியில் கைச்சாத்திடத்ட தேவையில்லை. கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் அதில் கைச்சாத்திடலாம் என அவர் இவ்வாறு தெரிவித்தார்.