டெங்கு நோயினால் கடந்த ஏழு மாதங்களில் 34 078 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 7 815 நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. சுமார் 44 சதவீதமான டெங்கு நோயளர்கள் மேல் மாகாணத்திலேயே இணங்காணப்பட்டுள்ளதாக அறிக்கையிட்டிருக்கிறது.
கடந்த ஜெனவரி மாதத்தில் 5 580 ஆக காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் முறையே 3736, 3832, 2970 ஆக காணப்பட்டது.
மே மாத்தின் பின்னர் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் 4239 அக காணப்பட்ட டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில், ஜூனில் 5906 நோயாளர்களும் ஜூலையில் 7815 நோயளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். காலநிலையில் ஏற்பட்ட மாற்றமே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காணமாக அமைந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவ தெரிவிக்கிறது.
கடந்த ஏழு மாதங்களில் மேல்மாகாணத்தில் மாத்திரம் 7260 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். ஜூலை மாத இறுதியில் மேல் மாகாணத்தில் 1857 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்திரப்பதாகவும் நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.