அம்பாந்தோட்டை மேயருக்கு ஐந்து வருட கடூழிய சிறை

296 0

பிரபல விளையாட்டு துப்பாக்கி வழக்கில் அம்பாந்தோட்டை நகர மேயர் விராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட இருவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று அறிவித்தது.

அத்துடன் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற  நீதிபதி சாமர தென்னகோன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 17 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.