விமான சேவைக்கட்டண குறைப்பால் மாத்திற்கு 175 மில்லியன் நஷ்டம் ஏற்படும்!

316 0
 இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபத்திரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில், 

 

உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு தரித்து வைத்திருப்பதற்கான கட்டணத்தில் நூற்றுக்கு 25 வீத குறைப்பை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை விமான சேவையின் சுதந்திர சேவையாளர் சங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவையில் அதிக வருமானமீட்டும் பிரதான பிரிவாக இந்த பிரிவு காணப்படுகின்றது. இதன் மூலம் வருடத்திற்கு 100 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப் பெறுகிறது. இந்நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமையின் மூலம் விமான சேவையை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை என்பது தெளிவாகிறது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகைதரும் விமானசேவை மந்தமடைந்துள்ளதாக அரசாங்கம் பொய் கூறிக் கொண்டிருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அனைத்து விமான சேவைகளும் தற்கோது இயங்குகின்றன. எந்த விமான சேவையும் முடங்கவில்லை என்பதை அரசாங்கத்திடம் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம். எமது கருத்தை மீறியும் சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டால் விமான சேவை மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் மாதத்திற்கு 175 மில்லியன் வரை குறைவடையும் என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம் என்றார்.