அதிகரிக்கப்பட்டுள்ள பால்மாவின் விலை

325 0

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 15 ரூபாவாலும் 400 கிராம் பால் மாவின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு கிலோ பால்மாவின் புதிய விலை 935 ரூபாவாகவும் 400 கிராம் பால் மாவின் விலை 375 ரூபாவாகவும் நிர்ணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.