புத்தளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி

393 0

ஆனமடுவ, வள்பாளுவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02) அதிகாலை 2 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹகும்புக்கடவல, வள்பாளுவ, லீகொலவெவ பகுதியைச் சேர்ந்த அபேரத்ன ஹேரத் முதியன்சலாகே தயாரத்ன (வயது 54) என்பவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தேவை நிமித்தம் தனது வீட்டுக்கு பின்பக்கமாக சென்ற போதே, இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த குறித்த நபரை, அயலவர்கள் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் ௯றினர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.