நிஸ்சங்க யாபா சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்ணான்டோவுக்கு பிடியாணை

720 0

எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்சங்க யாபா சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவன முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எவன் கார்ட் வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிஸ்சங்க யாபா சேனாதிபதி மற்றும் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை.

எவன் கார்ட் நிறுவன தலைவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிஸ்சங்க யாபா சேனாதிபதி சிங்கப்பூர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரக்ன லங்கா நிறுவன முன்னாள் தலைவரின் வழக்கறிஞர், பாலித்த பெர்ணான்டோ மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சாஷி மகேந்திரன் வழக்குடன் தொடர்புடைய இருவரும் நீதிமன்றில் ஆஜராக தவறியதால், இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும், எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்சங்க யாபா சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவன முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.