எமது ஜனா­தி­பதி பத­வி­யேற்­றதும் மைதா­னத்தை தருவேன்” – மஹிந்தானந்த

349 0

வடக்கிலுள்ள இளை­­ஞர்­களே 2 மாதங்கள் பொறு­மை­யாக இருங்கள். எமது கட்­சியின் ஜனா­தி­பதி பொறுப்­பேற்­றதன் பின்னர் ஒரு வரு­டத்­திற்குள் கிளி­நொச்சி விளை­யாட்டு மைதா­னத்தை புன­ர­மைத்து  தருவோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். 

கிளி­நொச்­சிக்கு நேற்று விஜயம் மேற்­கொண்ட அவர் கிளி­நொச்சி விளை­யாட்டு மைதா­னத்தை பார்­வை­யிட்டார். இதன்­போது ஊட­கங்­களுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு  உள்­ளிட்ட மாவட்­டங்­களில் அதி­க­மான விளை­யாட்டு வீரர்கள் உள்­ளனர். இங்­கி­ருந்­துதான் தர்­ஸினி என்ற வீராங்­க­னையும் தெரி­வானார். அவர் இப்­போது உலக நாய­கி­யாக சாதித்து வரு­கின்றார். இவ்­வா­றான இளை­ஞர்­களுக்­காக எமது அர­சாங்­கத்­தினால் இந்த விளை­யாட்டு மைதானம் உரு­வாக்­கப்­பட்­டது.

2011ஆம் ஆண்டு இந்த விளை­யாட்டு மைதா­னத்தின் பணி­களை நான் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக இருந்­த­போது ஆரம்­பித்து வைத்தேன். ஆனால் எம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட 50 வீத­மான பணியை தவிர வேறு பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. 10 வரு­டங்­க­ளாக இந்த மைதானம் இவ்­வா­றா­ன­தா­கவே உள்­ளது.

இந்த அர­சாங்கம் எதனை செய்­கின்­றது. நான்­கரை வரு­டங்­க­ளாக இந்த விளை­யாட்டு மைதா­னத்தை அமைத்து மக்­க­ளுக்கு வழங்­க­மு­டி­யாது போயுள்­ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பாரா­ளு­மன்றில் பேசு­வ­தில்லை. அவர்கள் அங்கு எதையும் பேச­மாட்­டார்கள்.

இந்த விளை­யாட்டு மைதா­னத்தை திறந்து மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று நான் சிறி­த­ர­னி­டமும் பல­முறை பேசி­யுள்ளேன். இங்கு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர். சிறி­தரன் இருக்­கின்றார். அவர்கள் எவரும் இது தொடர்பில் பேசு­வ­தில்லை எனவும் அவர் இதன்­போது சுட்­டிக்­காட்டினார்.