நம்பிக்கையில்லாப் பிரேரணை, வரவு, – செலவு திட்டம் ஆகியவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஓர் அரசியல் வியாபாரமாகும். இவ்விடயங்களின் ஊடாகவே அரசாங்கத்தில் இருந்து பல வரப்பிரசாதங்களையும், அரசியல் தேவைகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் ஒருபோதும் தேசிய பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிரணியினர் மீண்டும் கொண்டு வருவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அரசாங்கம் இன்னும் குறுகிய காலத்திற்கு மாத்திரமே ஆட்சியில் இருக்கும் இடைப்பட்ட காலத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது எவ்வித பயனுமற்றது.
எதிரணியினர் ஆரம்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த போது அப்பிரேரணை வெற்றிப் பெறும் தருவாயிலே காணப்பட்டது. நெருக்கடி நிலையில் அரசாங்கத்தை பாதுகாப்ப வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணினக்கு காணப்படுவதால் அவர்கள் காரணமே இன்றி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அரசாங்கத்தையும் மிக அழகாக பாதுகாத்தார்கள்.
அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் வரவு -செலவு திட்டம் ஆகியவை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு சிறந்த அரசியல் வியாபாராமாகும். வாய்ப்புக்களை தமக்கு பயன்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியில் தேவையயானவற்றை நிறைவேற்றிக் கொண்டார்கள். அரசாங்கத்தின் மத்தியில் உள்ள நன்நிலைமையினையும், அதிகாரத்தையும் ஒருபோதும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பயன்படுத்தவில்லை.
தற்போ து அனைத்து தரப்பினரின் நோக்கமும் ஜனாதிபதி தேர்தலையே மையப்படுத்தி காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் உத்தியோகபூர்வமாக இம்மாதம் 11ஆம் திகதி அறிவிக்கப்படுவார். குண்டுத்தாக்குதலின் குற்றவாளிகளுக்கும்:, பொறுப்புக்களை தவறவிட்டவர்களுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆட்சி மாற்றத்தின் பிரதான நோக்கமாக காணப்படும் என்றார்.