படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் புதிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தாமே கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு, புலனாய்வுத் துறை சாஜன், ஒருவர் அண்மையில் தற்கொலை செயது கொணடார்.
எனினும், லசந்த கொலை நிகழ்ந்தவேளை தற்கொலை செய்துகொண்ட நபர் கேகாலையிலுள்ள அவரது வீட்டில் இருந்ததாக குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அத்திடிய பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட சாஜன் 2009ஆம் ஆண்டு பயன்படுத்திய தொலைபேசி அழைப்புக்களை பரிசீலனை செய்தபோது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது.
ஜயமான்ன என்ற சார்ஜன்ட் மேஜரின் தொலை பேசி அழைப்பு லசந்த கொலை இடம்பெற்ற தினத்தில் அவரது வீட்டுப் பிரதேசம் அமைந்துள்ள இடங்களிலேயே செயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.