கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
முதலாம் கட்டம் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்டம் அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையும், 3 ஆம் கட்டம் அடுத்த மாதம் 24 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடைத்தாள் திருத்தும் காலப்பகுதியில் 12 பாடசாலைகள் முழுமையாகவும் 26 பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
குறித்தப் பாடசாலைகள் 3 ஆம் தவணைக்காக அடுத்த மாதம் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 39 பாடசாலைகளில் இடம்பெறும்.
இதேவேளை ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 19 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.