கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் கைது செய்துள்ளனர்.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இணைந்து வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது அங்கு 10 பொதிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்த கஞ்சா தொகை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் 40 மற்றும் 42 வயதுடைய புத்தளம் மற்றும் கல்பிட்டியவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.