சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் மற்றும் 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் விக்கும் களுஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் குற்றவளிகள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா ரொக்கப் பிணை 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.