பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகளும் தேர்தல், சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்களும் அடங்கிய குழு ஆய்வு பணியினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
இந்தக் குழு 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்குமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி பயனுள்ளதாகவும் சாத்தியமானதாகவும் இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்காகவும் உண்மை தகவல்களை சேகரிப்பதே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.