வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப் பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – 7 ஹனீபா வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (2) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.