முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச்சட்டம் நிறைவேற்றம், புர்கா ஆடைக்கு நிரந்தர தடை ஆகியவற்றை நிறைவேற்றி அரசாங்கம் ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அத்துடன் ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதத்தை கடந்து விட்டாள் அரசாங்கம் நாட்டில் குண்டுத்தாக்குதல் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்கி விடும்.
குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கிடையில் தற்போது போட்டித்தன்மை காணப்படுகின்றது. தாக்குதல் இடம் பெற்று மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் இன்றும் ஒரு தீர்வு முன்வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.