ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கூடியிருந்த போதிலும், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று காலை கூடிய ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவினரின் கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலயங்கள் வரை இடம்பெற்றது.
இதன்போது எதிர்வரும் 5 ஆம் திகதி அமைக்கவுள்ள புதிய கூட்டணி தொடர்பிலும் ஜனநாயக தேசிய முன்னணிக்கான பொதுக் கொள்கைகள் தொடர்பிலும் விசேடமாக ஆரயெப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.