கிளிநொச்சி இரட்டைப் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

470 0

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் கடந்த 30ஆம் திகதி தாயும் மகனும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் அயல் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொலைக்குற்றவாளி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதற்கமைய தனக்கும் அயல்வீட்டு நபர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அதிகாலை அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால், அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.