பொலிஸாரினால் சுட்டுக் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் பயணித்த மோர்டார் சைக்கிலிலும் சுட்டுக் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மோட்டார் சைக்கிலின் முன்பக்கமாக உள்ள கெட் லைய்ட் இல் தோட்டா துளைத்து மோட்டார் சைக்கிலின் பெற்றோல் தாங்கிக்கு கீழே உள்ள செசி இருப்பின் ஊடாக தேய்த்துக் கொண்டு மோட்டார் சைக்கிலின் இயந்திரத்தினை துளைத்துக் கொண்டு சென்றுள்ளமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிலில் காணப்படும் சுட்டுக் காயங்களின் ஊடாக மாணவர்களின் சாவில் மறைந்திருக்கும் பல உண்மைச் சம்பவங்களும் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மோட்டார் சைக்கிலுக்கு முன்பக்கமாக துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது என்றார் மாணவர்கள் மோட்டார் சைக்கிலில் வருகதை கண்டதுமே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்த தொடங்கி விட்டனர்.
இதனால்தான் மோட்டார் சைக்கிலின் மோட்டார் சைக்கிலின் முன்பக்கமாக துப்பாக்கி சுடு பட்டுள்ளது.
எனவே பொலிஸார் சொல்வதைப் போன்று பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் மறிக்கும் போது நிறுத்தாது, வேகமான சென்றதினாலேயே சுட்டதாக சொல்வது பெய் என்பதை மோட்டார் சைக்கிலில் காணப்படும் சுட்டுக் காயம் உறுதிப்படுத்துகின்றது.